உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

மோட்டார் சைக்கிள் விபத்து: 22 மற்றும் 24 வயது இளைஞர்கள் பலி.!!!

யாழ்ப்பாணத்தில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்

கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான 22 வயதான சிவதாசன் துசிந்தன், 24 வயதான ஏழுமலை துசாந்தன்ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தமது வீட்டை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இருவருமே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929724

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time