உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு; 7 மாதங்களில் 749 ஓட்டுநர்கள் உயிரிழப்பு.!!!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளில் அதிகளவான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள் விபத்துகளினாலேயே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, முறையான தரநிலையிலான பாதுகாப்புத் தலைக்கவசத்தை அணிவதன் மூலம் வீதி விபத்துகளின்போது ஏற்படும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் பெருமளவில் குறைக்க முடியும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரை 1,626 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,585 விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வருடம் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த காலப்பகுதியில் 749 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 18 வயதுக்குட்பட்ட 13 பேரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் அவர்களுடன் பின்னால் பயணிப்பவர்களும் தங்களது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எப்போதும் தரமான தலைக்கவசத்தை அணிய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய வீதி பாதுகாப்புச் சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வருடாந்தம் சுமார் 2,500 முதல் 2,700 வரையான வீதி விபத்து உயிரிழப்புகள் பதிவாகும் நிலையில், அவற்றில் சுமார் 1,000 உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள் விபத்துகளுடன் தொடர்புடையவை என தெரிவித்தார்.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்வதே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீதி விபத்துகளில் ஏற்படும் பல உயிரிழப்புகளுக்கு தலைக்காயங்களே முக்கிய காரணமாக இருப்பதால், தலைக்கவசம் அணிவது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சர்வதேச தர நிர்ணய நிறுவனம், நுகர்வோர் சேவை அதிகாரசபை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து நாடளாவிய ரீதியில் தரமான தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பயன்படுத்தும் தலைக்கவசம் கட்டாயமாக SLS தரச்சான்று கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் தேசிய வீதி பாதுகாப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067013

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time