உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் மீன் வியாபாரத்திற்கு சென்றவர்; பரிதாப மரணம்.!!!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (19) வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி புல்லாவி சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பகுதியில் இருந்து மீன் வியாபாரத்திற்காக மாங்கேணி பகுதிக்குச் சென்று ஊர் திரும்பும் போதே விபத்தில் மரணமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது எதிரே வந்த பஸ் வண்டி மோதியதில் குறித்த நபர் விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் மரணமடைந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான வாழைச்சேனையைச் சேர்ந்த 40 வயதுடைய சலீம் றபாய்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810520

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time