உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி.; விசாரணையின் பின் வெளியேறினார்.!!!

• 2013, 2014ஆம் ஆண்டுகளில் தனிப்பட்ட ஊழியரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பு தொடர்பில் விசாரணை.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (13) ஆஜராகி விசாரணைகளுக்கு உட்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தனது தனிப்பட்ட ஊழியர் ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் தாம் அழைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த பண வைப்பு தொடர்பில் ஆணைக்குழுவினர் தம்மிடம் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து தாம் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067025

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time