உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

72 வயது ஆட்டோ சாரதி மர்ம மரணம் – சடலம் வடிகாலில் மீட்பு: விசாரணை தீவிரம்.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

புத்தளம் தில்லையடி, அல்-காசிம் கிராமத்திற்கு அருகில் வீதியோரத்தில் இருந்து முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய அப்துல் லத்தீப் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் சனிக்கிழமை (21) இரவு வீட்டில் இருந்தபோது, வாடகை சவாரி (Hire) ஒன்றுக்குச் செல்வதாகக் கூறி இனந்தெரியாத ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் காலை வரையிலும் வீடு திரும்பாத நிலையில், அவரது மருமகன் புத்தளம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடப்பனாவில்லு கிராமத்திற்குச் செல்லும் வீதியின் வடிகான் ஒன்றில் சடலம் கிடப்பதைக் கண்ட  ஒருவர் கிராமவாசிகளுக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொலிஸாரிடம் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாடகை சவாரிக்குச் செல்வதாகக் கூறி அழைத்து வந்த நபரே இக்கொலையை செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933759

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time