உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் இல்லை.!!!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருளை விநியோகிப்பதில்லையென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள எரிபொருளை மட்டுமே விநியோகித்து வருவதாகவும், எரிபொருள் இருப்புக்களுக்கு எந்த புதிய ஓர்டர்களையும் வழங்கப் போவதில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடித் தொகையை இரத்து செய்து, அது நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சூத்திரத்தின் படி பணம் செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது செலுத்தப்படும் தொகை சட்டவிரோதமானது என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

இந்த நிலையில், எரிபொருள் கொள்வனவு செய்வதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று(28) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879706

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time