உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சிறுவர்களை இணையவழித் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க தேசிய வேலைத்திட்டம்.!!!

நாட்டில் சிறுவர்கள் இணையதளங்களைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் இணையவழித் துன்புறுத்தல்களிலிருந்து (Online Harassment) அவர்களைப் பாதுகாப்பதற்கான பரந்தளவிலான தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தில், இணையவழி குற்றச்செயல்களை கண்காணிக்கும் நவீன முறைமைகள், ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறியும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கான விழிப்புணர்வு மற்றும் கல்விசார் தீர்வுகள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையவழி துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களை விரைவாக மீட்டு, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்கும் செயற்பாட்டு வழிமுறைகளும் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெறவுள்ளன.

சிறுவர்களுக்கான பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இந்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066965

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time