உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம்; உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்.!!!

“நேர்மையான கலாசாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ், 2026 ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் தேசிய நேர்மை வாரம் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் இன்று (27) அனுஷ்டிக்கப்பட்டது.

ஊழலற்ற, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுமிக்க அரச நிர்வாகத்தை உருவாக்கும் நோக்கில் அரச நிறுவனங்களில் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில், பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு நேர்மையுடனும் பொறுப்புடனும் சேவையாற்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு அரச சேவையில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை வலுப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010664

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time