உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

ஆற்றில் குதித்த குடும்பப்பெண்; காப்பாற்றிய இளைஞர்கள்.!!!

ஓட்டமாவடி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த குடும்பப்பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றது.

தகவலின்படி, முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண், தொலைபேசியில் உரையாட வேண்டுமெனக் கூறி வாகனத்தை ஓட்டமாவடி பாலம் அருகே நிறுத்துமாறு சாரதியிடம் கேட்டுள்ளார். சாரதி வாகனத்தை நிறுத்தியவுடன், பெண் திடீரென ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அவதானித்த இரு இளைஞர்கள், ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தோணியை உடனடியாக எடுத்துச் சென்று, தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time