இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம்; உலகின் அதிவேக வளர்ச்சி நாடுகளில் 4ஆம் இடம்.!!!
உலகின் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக சர்வதேச நிதியமைப்பு (IIF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்தப் பட்டியலில் வியட்நாம் முதலிடத்தையும், பெலிஸ் இரண்டாம் இடத்தையும், மொசாம்பிக் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
மேலும், கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பான தரவரிசையிலும் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதுடன், அந்தப் பிரிவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம், நாட்டின் பொருளாதார நிர்வாகம், முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் கடன் முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை பிரதிபலிப்பதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.