உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

ரிட்ஸ்பரி சாம்பியன்ஷிப் 2026 கிண்ணம் பாலமுனை நெஷனல் அணியின் வசம்.!!!

ரிட்ஸ்பரி அனுசரணையிலும், காத்தான்குடி காற்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற RITZBURY CHAMPIONSHIP 2026 ஏழு பேர் கொண்ட காற்பந்தாட்டத் தொடரில், பாலமுனை நெஷனல் விளையாட்டுக் கழகம் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஹிஸ்புழ்ழாஹ் மைதானத்தில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.

48 முன்னணி அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில், பாலமுனை நெஷனல் விளையாட்டுக் கழகம் மட்டக்களப்பு ஈஸ்வரா அணியை எதிர்கொண்டு 2–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

மூன்று நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர் முழுவதும், பாலமுனை நெஷனல் அணி சிறந்த அணிச் சேர்க்கை, வேகமான ஆட்டம் மற்றும் சிறப்பான தாக்குதல் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இறுதிப் போட்டியிலும் தனது முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய பாலமுனை நெஷனல் அணி, RITZBURY CHAMPIONSHIP 2026 சாம்பியன் பட்டத்தை பெருமையுடன் தனதாக்கிக் கொண்டது.

இந்த வெற்றி, பாலமுனை நெஷனல் விளையாட்டுக் கழகத்தின் அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1010667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time