உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

டிஜிட்டல் அரச நிர்வாகத்தை வலுப்படுத்த தேசிய செயலமர்வு; செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம்.!!!

அரச துறையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “அரச துறையின் மாற்றத்திற்காக தரவுக் கட்டுப்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய செயலமர்வு” இன்று (20) கொழும்பில் ஆரம்பமானது.

மூன்று நாட்கள் நடைபெறும் இச்செயலமர்வை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் திணைக்களத்தின் (UN DESA) கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் அரச நிர்வாகப் பிரிவு (DPIDG), அதன் அரச நிர்வாகம் தொடர்பான செயற்திட்ட அலுவலகம் (UNPOG), ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரச துறையின் சிரேஷ்ட அதிகாரிகளின் தரவுக் கட்டுப்பாடு, டிஜிட்டல் அரச நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தும் திறனையும் அறிவையும் மேம்படுத்துவதே இச்செயலமர்வின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது, சர்வதேச சிறந்த நடைமுறைகள், தரவு முகாமைத்துவம், ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் அரசாங்க அமைப்புகள், நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, டிஜிட்டல் மாற்றத்திற்குத் தேவையான கொள்கை மற்றும் நிறுவன ரீதியிலான தயார்நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விளக்கப்படவுள்ளன.

மேலும், தேசிய தரவுக் கட்டுப்பாட்டுச் சட்டகத்தை உருவாக்குதல், டிஜிட்டல் அரச சேவைகள், அரச அதிகாரிகளுக்கான செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், பொறுப்புணர்வுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், உற்பத்தித்திறன் (Generative) மற்றும் முகவர் சார்ந்த (Agentic) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நடைமுறையில் பயன்படுத்துதல் மற்றும் நிறுவனங்களுக்கான செயல் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இந்த தேசிய செயலமர்வில் அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள், சர்வதேச வளவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் பாண்டவ், UNPOG பிரதானி சாங்சியோப் ஹான் மற்றும் GovTech இலங்கை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஷெவான் குணதிலக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066959

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time