பிரதமரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்த கடற்படை தளபதி; தேசிய பாதுகாப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
இலங்கை கடற்படையின் 27வது கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை வியாழக்கிழமை (ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, கடற்படையின் 27வது தளபதியாக நியமிக்கப்பட்டதையொட்டி பிரதமர், வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல், நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் அவற்றில் இலங்கை கடற்படை ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பு தொடர்பாக இரு தரப்பினரும் விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
சந்திப்பின் நிறைவில், நினைவாக கடற்படைத் தளபதி, பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்தார்.


