உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

புதிய கோவிட் 19 திரிபால் நாட்டில் மீண்டும்; பி.சி.ஆர். பரிசோதனை.!!!

புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822211

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time