உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்கள் திடீர் பரிசோதனை.!!!

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்புக்கஞ்சி தயாரிக்குமிடங்கள் இன்று (03) திடீர் சுகாதாரப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் தலைமையில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.எம்.அஸ்லம், ஏ.வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது, நோன்பு கஞ்சி தயாரித்தல், விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன், பொலித்தீன், பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் சம்பந்தமான அறிவுரைகள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879702

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time