உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

ஒன்றரை வயது குழந்தை 50,000 ரூபாய்க்கு விற்பனை – தாய் கைது.!!!

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை வெறும் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தாய் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் குழந்தையின் தாய் மற்றும் குழந்தையை வாங்கிய நபர் ஆகிய இருவரையும் தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் இந்த மனித விற்பனை சம்பவம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட குழந்தை தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

வறுமை காரணமாக இருந்தாலும், ஒரு உயிரை – அதுவும் சொந்தக் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 930590

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time