அஸ்வெசும பயனாளிப் பட்டியலில் இருந்து மேலும் 4.25 இலட்சம் குடும்பங்கள் நீக்கம்.!!!
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்று (30) முதல் பயனாளிப் பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இந்தக் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் மீண்டுள்ளன என்ற அடிப்படையில், அவர்கள் இனி அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகளாக தொடரமாட்டார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.
பட்டியலிலிருந்து நீக்கப்படும் குடும்பங்களுக்கு இதுவரை மாதந்தோறும் சுமார் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது.
இதனுடன், அஸ்வெசும திட்டத்தின் ‘இடைநிலை’ (Transitional) பிரிவில் இடம்பெற்றிருந்த சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் ஏற்கனவே பயனாளிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.