கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது; குடிவரவு திணைக்கள தகவல்.!!!
கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் குறைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 65,351, பெப்ரவரி மாதத்தில் 54,161, மார்ச் மாதத்தில் 50,356 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, முதல் காலாண்டில் மொத்தம் 169,868 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 53,216, பெப்ரவரி மாதத்தில் 74,402, மார்ச் மாதத்தில் 77,128 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 204,746 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளமை புள்ளிவிபரங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது.