உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

வர்த்தகருக்கு அபராதம் – 38 லட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமைனது; நீதிமன்றம் தீர்ப்பு.!!!

கீரி சம்பா அரிசி தொகை கைவசம் வைத்திருந்து இல்லை என்று அறிவித்ததற்காக குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக அபராதம் விதித்தும், 3.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கீரி சம்பா அரிசியை அரசுடமையாக்கியும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் கொழும்பு 12 பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனையின் போது இந்த அரிசி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த மாதம் 11 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அதன்படி, மேற்கண்ட நபர்கள் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.

வர்த்தக நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கிராம் அடங்கிய 3,000 கீரி சம்பா பொதிகளையும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த நிலையில், நேற்று (18) நீதிமன்றத்தால் 3.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிக சந்தை பெறுமதி கொண்ட அரிசி தொகையை அரசுடமையாக்கப்பட்டது.

வர்த்தகர் ஒருவர், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைய பொருட்களை கைவசம் வைத்திருந்து அதனை இல்லை என்று கூறி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் குறித்த பொருளை நீதிமன்றத்திற்கு அரசுடமையாக்க அதிகாரம் உள்ளது.

சந்தையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல் மற்றும் மறைத்தல் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்து சோதனைகளை நடத்தும் என்பதோடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி மீது விசேட கவனம் செலுத்தவும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230971

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time