உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

வெல்லாவெளியில் பொலிஸார் மீது தாக்குதல்; இரு பொலிஸார் படுகாயம்.!!!

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிடச் சென்றபோது சம்பவம்.

மட்டக்களப்பு – வெல்லாவெளி, 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உள்ளிட்ட சுமார் 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (06) இரவு சுமார் 7 மணியளவில், கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் ஏழு பொலிஸார் ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களின் உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட குழுவினர், பொலிஸாரை பொல்லுகளால் தாக்கி முற்றுகை நடவடிக்கையைத் தடுக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் இரு பொலிஸார் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067015

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time