உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு; உடனடி பணி இடமாற்றம்.!!!

16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நுகேகொடை பொலிஸ் நிலையத்திற்கும், தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வத்தளை பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் சட்ட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் மனித உரிமைகள் பிரிவுக்கும், எல்பிட்டிய பொலிஸ் பிரவின் பொறுப்பதிகாரி கொஸ்கொடை பொலிஸ் நிலையத்திற்கும், வாதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கும், மத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி வாதுவை பொலிஸ் நிலையத்திற்கும், அதிவேக வீதி பொலிஸ் பிரிவிலிருந்தவருக்கு அதிவேக வீதி பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கும், பன்சியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பன்சியகம பொலிஸ் நிலையத்திற்கும், பொத்தப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கும்,கம்பளை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொத்தப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கும், தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கும், கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தருமபுரம் பொலிஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தினுடைய நிர்வாக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. என் டி. பி.சி. லிங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822211

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time