உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

பொலிஸாருக்கு தனியான சம்பள கட்டமைப்பு.!!!

பொலிஸ் துறைக்கு என தனியான சம்பளக் கட்டமைப்பை வகுப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (10) கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்தோடு, தற்போது இதற்கு பொருத்தமான வரைவு பதில் பொலிஸ்மா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் தொடர்புடைய சம்பள கட்டமைப்பை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் சேவையில் உள்ள ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் துறையில் காணப்படும் அரசியல்மயமாக்கலை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், கிராமங்களில் பாதுகாப்புக் குழுக்களை நிறுவுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1081051

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time