உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய கலந்துரையாடல்.!!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, குறித்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை கவனத்தில் எடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றங்களால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணைகள், வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாக அது அமைகிறது என தெரிவித்தார்.

இதற்கமைய, சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்துவதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் இலகுவாக நீதியைப் பெறும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்திலும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டதல்ல எனவும், அது நாட்டின் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இவை முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பரந்த நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடித்தல் போன்ற விடயங்களில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எனினும், ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான தீர்மானத்தை மேலும் ஆராய்ந்து, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைத்தனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067025

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time