உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஐ.தே.க. முக்கியஸ்தர்களுடன் ரங்கே பண்டார விசேட சந்திப்பு.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-

கற்பிட்டி நகரில் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) முக்கியஸ்தர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றது.

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே. அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜேசுதாசன், பிரதேச சபை வேட்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், அபிமானிகள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சந்திப்பின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அரசியல் நிலைமை, எதிர்கால செயற்பாடுகள் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பில் கட்சியின் வகிபாகம் எவ்வாறு அமையும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ரங்கே பண்டார, எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னரே கட்சியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் தெளிவான அறிவிப்பை வழங்க முடியும் என தெரிவித்தார்.

கட்சியின் எதிர்கால அரசியல் பயணம் மற்றும் கூட்டணிசார் முடிவுகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடலாக இச்சந்திப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066841

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time