உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

ரணில் விக்ரமசிங்கவை – தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரை.!!!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்திரைக்கப்பட்டுள்ளது.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் அதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை வைத்தியர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர்.

அதன்படி, சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதி இதற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230630

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time