உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ரவூப் ஹக்கீம் – நிஸாம் காரியப்பர்:  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவ அங்கீகாரம் தொடர்பில் புதிய கோரிக்கை.!!!

கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் கௌரவ நிஸாம் காரியப்பர் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டுமென உத்தியோகபூர்வ கோரிக்கை.

உயர்நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளின் நிறைவைத் தொடர்ந்து, கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் கௌரவ நிஸாம் காரியப்பர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பிரதிநிதிகளாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற ரீட் மனு (SC Writ Application No. 70/2025) நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டமைப்பிற்குள் தம்மை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறுவது சம்பந்தமாக கட்டளையை கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2026 மே 4 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன:

கூட்டணி குறித்த அறிவித்தல்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)  ஆகியவற்றுக்கு இடையிலான அரசியல் கூட்டணி குறித்த விபரங்கள் உட்பட தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் என்று ஏற்கனவே நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியது.

தேவையான தகவல்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், இது குறித்து மேலதிக விசாரணைகள் அவசியமில்லை என நீதிமன்றம் தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த மனுவின் கோறிய நிவாரணம் பெறப்பட்டிருப்பதனால் இந்த மனு தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள தேவை இல்லை என்ற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தலைத் தொடர்ந்து, கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் கௌரவ நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கைக் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 811115

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time