நாடாளுமன்ற காப்புறுதி நிதியை “டிட்வா” நிவாரண நிதியத்திற்கு வழங்க: ரவி கருணாநாயக்க முடிவு.!!!
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, தமக்குரிய நாடாளுமன்றக் குழு காப்புறுதித் திட்டத்தின் (Group Insurance Scheme) கீழ் வழங்கப்படும் நன்மையைப் பெறுவதைத் தவிர்த்து, அந்த நிதியை முழுமையாக “டிட்வா” (Ditwah) சூறாவளி நிவாரண நிதியத்திற்கு வழங்குமாறு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
சுமார் ரூ. 250,000 பெறுமதியான தனது காப்புறுதி நன்மையைத் தள்ளுபடி செய்து, அதனை பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்குமாறு நாடாளுமன்ற உதவி இயக்குநருக்கு (நிர்வாகம்) அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளியால் பல மாவட்டங்களில் வீடுகள், உட்கட்டமைப்புகள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக “டிட்வா” நிதியம் அமைக்கப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.