உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 28, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

வாதுவையில் தடம்புரண்ட ‘சாகரிகா’ ரயில்: கரையோர ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதம்.!!!

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிகா’ கடுகதி ரயில் இன்று (24) காலை வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் தடம்புரண்டதன் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல ரயில்கள் தாமதமாக இயங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

தடம்புரண்டுள்ள ‘சாகரிகா’ கடுகதி ரயிலை மீண்டும் தடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ரயில் போக்குவரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தால் கரையோரப் பகுதியில் பயணித்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 929725

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time