உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சீரற்ற வானிலை: அவசர மீட்புக்கு 171 கடற்படை நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்.!!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற தீவிர வானிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் திடீர் மண்சரிவு அபாயங்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை கடற்படை 171 பேரிடர் நிவாரணக் குழுக்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.

இந்த நிவாரணக் குழுக்களில் மொத்தம் 700 கடற்படைப் பணியாளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற்றுதல், அவசரகால இடமாற்ற உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தக் குழுக்கள் முழுமையான தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கடற்படையின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066998

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time