உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு; பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியின் உறவினர் பலி.!!!

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் ‘கஞ்ச்பானை இம்ரான்’ என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால பகைமை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067018

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time