உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி உறுதி – சஜித் பிரேமதாச நம்பிக்கை.!!!

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நிச்சயமாக வெற்றிபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக தமது கட்சி தொடர்ந்து போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அதிகாரங்களை மையப்படுத்தி தன்வசப்படுத்தும் போக்கில் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் அளவுக்கு அதிகமான பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்றும், அதிகப்படியான பெரும்பான்மை ஆரோக்கியமற்ற அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கும் என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

“ஜனநாயகத்தின் சமநிலையைப் பேணுவதற்கு அதிகாரப் பகிர்வு அவசியம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066876

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time