உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 24, 2026

Hot News

IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!
IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!

Share :

வெல்லம்பிட்டியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதி உயிரிழப்பு.!!!

அம்பாறை டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று இன்று (24) அதிகாலை வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கோட்டையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த பேருந்து, இன்று காலை சுமார் 5.30 மணியளவில் வெல்லம்பிட்டி அம்பகஹ சந்தி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து சாரதிக்கு பயணத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் விளைவாக பேருந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 905036

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time