உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

சிற்றுண்டிச்சாலை உடைப்பு: ரூ.40,000 இனிப்புகள் திருட்டு – மூன்று சிறுமிகள் கைது.!!!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பொருட்களை திருடியதாக கூறப்படும் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பேரில், களுத்துறையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய டொபிகள், சாக்லேட்கள், லொலிபொப், சூயிங்கம், பெப்பர்மிண்ட் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1215147

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time