உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சிறைச்சாலை நிலைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்.!!!

நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர், சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது என தெரிவித்த அமைச்சர், இந்நிலையை சீரமைப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறைச்சாலை நிர்வாகத்தை வலுப்படுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067012

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time