உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

இளைஞர்களை போதையிலிருந்து காக்க விளையாட்டை வாழ்க்கை முறையாக்க வேண்டும் – ஜனாதிபதி.!!!

நாட்டில் ஆரோக்கியமானதும் ஒழுக்கமுள்ளதுமான எதிர்கால சந்ததியை உருவாக்க வலுவான விளையாட்டு கலாசாரம் அவசியமானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2026ஆம் ஆண்டுத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

விளையாட்டை வெறும் போட்டிகளாக மட்டுப்படுத்தாமல், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்த கலாசாரமாக மாற்ற மனப்பாங்கு ரீதியான மாற்றம் அவசியம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கம், வீதி விபத்துகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளைக் குறைப்பதிலும் விளையாட்டு முக்கிய பங்காற்றும் என்றார்.

மேலும், 2028 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தரமான பயிற்சி, நவீன வசதிகள் மற்றும் சர்வதேச தரத்திலான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச மட்டத்தில் சாதிக்கும் விளையாட்டு தலைமுறையை உருவாக்க திறமையான பயிற்சியாளர்கள் குழுவை உருவாக்குவதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டுத் திட்டங்கள், 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள், மன்னார், கிளிநொச்சி மற்றும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு வளாகங்களின் நிர்மாணப் பணிகள், சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கம் மற்றும் தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இலங்கை வீரர், வீராங்கனைகளின் திறன்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய “உயர் செயல்திறன் மையம்” (High-Performance Center) அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066968

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time