உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கைக்கு 5 இடங்கள் முன்னேற்றம்.!!!

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders – RSF) அமைப்பு வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திரச் சுட்டெண்ணில், 180 நாடுகளில் இலங்கை 134ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டு 139ஆம் இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 5 இடங்கள் முன்னேறி 134ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் ஊடக சுதந்திர மதிப்பெண்ணும் 2025ஆம் ஆண்டின் 39.93 புள்ளிகளில் இருந்து 2026ஆம் ஆண்டில் 40.77 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளின் ஊடக சுதந்திர நிலையை மதிப்பிடும் இந்தச் சுட்டெண், அரசியல், பொருளாதாரம், சட்டம், சமூக மற்றும் பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கிய சூழல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

எனினும், இலங்கையின் தரவரிசையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், ஊடக சுதந்திரம் தொடர்பான அனைத்து சவால்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தப்படுத்தாது என தெரிவிக்கப்படுகிறது.

ஊடகத் துறையின் பல்வகைமை, அரசியல் செல்வாக்கு மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தொடர்ந்தும் சவால்கள் காணப்படுவதாக RSF சுட்டிக்காட்டுகிறது.

ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை, நாட்டின் ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067029

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time