உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

இலங்கையில் அதிகரிக்கும் காசநோயாளர்கள்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை.!!!

இலங்கையில் கடந்த வருடம் (2024) காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆகப் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள், மற்றும் 250 குழந்தை நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

2035 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தாலும் காசநோயினால் ஏற்படும் இறப்புக்களை 95 சதவீதத்தாலும் குறைப்பதே எமது நோக்கமென சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் இருமல் லேசான காய்ச்சல், உடல் எடை இழப்பு, பசியின்மை, இரவில் வியர்த்தல், சோர்வு மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவை காசநோயின் அறிகுறிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள் உடனடியாக வைத்திய உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 879645

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time