உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வெகுமதி; பொலிஸ் அறிவிப்பு.!!!

வெல்லாவ மரலுவாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா வெகுமதி வழங்க பொலிசார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெல்லாவ பொலிஸ் பிரிவின் மரலுவாவ, வாசலா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர், கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி இரவு T56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை வழங்கினால் பொலிசாரின் சன்மான நிதியிலிருந்து சம்பந்தப்பட்ட தொகையை வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முடிவு செய்துள்ளார்.

தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்க பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வெல்லவ பொலிஸ் மேற்றும் குருணாகல் பிரிவு குற்றப் புலணாய்வுப் பணியகம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏதேனும் தகவல்களை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு வழங்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.

தொலைபேசி எண்கள்

071 – 8591244 (பிரிவு அதிகாரி, குருநாகல்)
071 – 8591882 (பொலிஸ் ஊடகப் பேச்சாளர்)

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231057

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time