உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கச் சென்ற விசேட அதிரடிப்படை சார்ஜன்ட்; நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம் இன்று (13) திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கையில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மூதூர் – தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில், சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க உள்ளிட்ட STF வீரர்கள் மஹாவலி கங்கையில் இறங்கி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, எதிர்பாராத விதமாக நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இன்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066933

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time