உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆறு ஆண்டுகளுக்கு பின் மீட்பு – காத்தான்குடியில் சந்தேகநபர் கைது.!!!

(ஜே.கே)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் ஆறு வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை நேற்று (20) மாலை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 31 ஆம் தேதி ஆரையம்பதியிலுள்ள பிரபல ஆடை தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து ஆரையம்பதியைச் சேர்ந்த நபருடைய குறித்த மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மோட்டார் சைக்கிள் சொந்தக்கார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக காத்தான்குடி பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளை தேடி வந்த நிலையிலும் கண்டுபிடிக்காத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பழைய வீதியால் சம்பந்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர் கைது செய்த அந்த நபரிடமிருந்து குறித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று லட்சம் ரூபாய் பெறுதியான குறித்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தநபர் தற்போது பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880129

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time