கடற்பரப்புகளில் பலத்த காற்று; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு.!!!
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிகளிலுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.