உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பாடசாலையில் மாணவர் மீது கத்திக்குத்து தாக்குதல்: சக மாணவன் மீது குற்றச்சாட்டு – பொலிஸார் விசாரணை.!!!

(கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்)

தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, ஒரு மாணவன் சக மாணவனால் கடதாசி வெட்டும் கத்தியால் (Paper Cutter) தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (06) மதிய வேளையில் பாடசாலை வளாகத்தினுள்ளேயே இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளான மாணவன் தங்கொட்டுவ – மாவத்தகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கே. கவிந்து நிம்சார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த அவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மாணவனும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மாணவனும் அதே பாடசாலையில் தரம் 11 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் ஒரே வகுப்பு மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இருவருக்குமிடையில் முன்பும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினமான திங்கட்கிழமை (06) இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்த நிலையில், ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கையை கடதாசி வெட்டும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், சம்பவம் குறித்து தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806172

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time