உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சுரேஷ் சலே வாய் வழி உணவை மட்டுமே தவிர்த்துள்ளார்; மருத்துவ ஊட்டச்சத்துக்களை நிராகரிக்கவில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.!!!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலே, வாய் மூலமாக உணவு உட்கொள்வதை மட்டுமே தவிர்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மருத்துவ விஞ்ஞான முறைகளின் ஊடாக உடலுக்குத் தேவையான திரவ ஆகாரங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்வதை சுரேஷ் சலே நிராகரிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மருத்துவ முறையிலான ஊட்டச்சத்துக்கள் இன்றி எவராலும் இவ்வளவு காலம் பட்டினியுடன் உயிர்வாழ முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், சுரேஷ் சலே முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கை பயனற்ற முயற்சியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் அவருக்கு தேவையான சிகிச்சைகளும் ஊட்டச்சத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066873

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time