உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

சிலாபத்தில் கரையொதுங்கிய சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகு: கடற்படை தீவிர விசாரணை.!!!

இந்தியாவிற்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் மீன்பிடிப் படகொன்று இன்று (15) அதிகாலை சிலாபம் – இரணைவில பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகு பாறைகளில் மோதாமல் கரையொதுங்கியுள்ள நிலையில், அதிலிருந்து யாரேனும் கரைக்கு வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கரையொதுங்கியுள்ள படகுக்கு கடற்படையினர் தற்போது பாதுகாப்பு வழங்கி வருவதுடன், படகின் உரிமை மற்றும் அது எவ்வாறு சிலாபம் கடற்கரையை வந்தடைந்தது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1067030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time