உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

‘ஐஜிபியிடம் சொல்லுங்கள்’ திட்டம் புதுப்பிப்பு: மூன்று மொழிகளில் முறைப்பாடு செய்யும் வசதி – உள்நாடு, வெளிநாட்டவர்களுக்கும் திறந்த சேவை.!!!

இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள ‘ஐஜிபியிடம் சொல்லுங்கள்’ (Tell IGP) திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நபர்களும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் தங்களது முறைப்பாடுகளை நேரடியாக ஐஜிபியிடம் சமர்ப்பிக்க முடியும்.

இந்த சேவையின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள், பல்வேறு குற்றச்செயல்கள், பொதுமக்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மற்றும் ஊழல் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் நேரடியாக தகவல் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவையைப் பெற விரும்புவோர் பொலிஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.police.lk⁠ ஐ அணுகி, அதில் வழங்கப்பட்டுள்ள https://telligp.police.lk⁠ என்ற மின் சேவையின் மூலம் அல்லது telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை அனுப்பி முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இச்சேவையை பயனுள்ளதாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076811

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time