உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 18, 2026

Hot News

IMG-20260517-WA0018
சமூக வளர்ச்சியின் அடித்தளம்: கல்வியிலா அல்லது அபிவிருத்தியிலா நிலைத்திருக்கும்???
IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!

Share :

தேசபந்து தென்னகோன் பாதுகாப்பு வழங்குமாறு; பொலிஸாரிடம் கோரிக்கை.!!!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபானி இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல் காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வௌியானது.

இவ்வாறான சூழலில் தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் செய்திப் பிரிவு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் வினவியது.

தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசபந்து தென்னகோனின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க பொலிஸாரினால் பாதுகாப்பு மதிப்பாய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கவுள்ளதாகவும், அதன் ஊடாக அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டால், பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 822287

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time