முச்சக்கர வண்டி மீது மரம் சரிந்து விழுந்து மாணவன் உட்பட மூவர் பலி.!!!
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரமான விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது திடீரென பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் கலபொட தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரும், பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், முச்சக்கர வண்டியின் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

