மகாவலி கங்கையில் துயரம்: நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் மாயம்.!!!
–கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ் –
சேருநுவர பகுதியில் உள்ள சோமாவதி வனப்பகுதியை ஊடறுத்து பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துயர சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக காணாமல் போனவர்களின் உடல்களை கண்டுபிடிக்கும் நோக்கில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.