உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மூதூர் ஷாபி நகரில் துயரச் சம்பவம்; 1 வயது 8 மாத பெண் குழந்தை – நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!!

மூதூர் ஷாபி நகர் பகுதியில் இன்று (05) இடம்பெற்ற துயரச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 1 வயது 8 மாதங்கள் வயதுடைய ஆலியா என்ற பெயருடைய பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் அருகிலிருந்த நீர் தேங்கிய பள்ளம் ஒன்றில் குழந்தை அறியாமலே விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குழந்தையை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக, சிறு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, வீடுகளின் சுற்றுவட்டாரங்களில் நீர் தேங்கும் பள்ளங்கள், கிணறுகள் மற்றும் திறந்த நீர்த்தேக்கங்கள் இருப்பின் அவற்றை பாதுகாப்பாக மூடிவைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்..

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 931767

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time