மட்டக்களப்பில் கட்டுப்பாட்டை இழந்த லொறி – மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது.!!!
மட்டக்களப்பு நகரில் கட்டுப்பாட்டை இழந்த லொறி மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்தது.!!!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு முன்பாக பயணித்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதுபான விற்பனை நிலையத்தின் முன்பகுதியை மோதிய சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
லொறி மோதிய வேகத்தால் விற்பனை நிலையத்தின் முன்பக்க வேலிகள், பாதுகாப்புத் தூண்கள் மற்றும் கட்டிடத்தின் முகப்புப் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை நேரம் என்பதால் வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தமையால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாரதியின் கவனக்குறைவு அல்லது தூக்க கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

